பார்முலா1 கார் பந்தயம்: மெக்சிகன் கிராண்ட்பிரி போட்டியில் ஹாமில்டன் வெற்றி


பார்முலா1 கார் பந்தயம்: மெக்சிகன் கிராண்ட்பிரி போட்டியில் ஹாமில்டன் வெற்றி
x
தினத்தந்தி 29 Oct 2019 12:10 AM GMT (Updated: 29 Oct 2019 12:10 AM GMT)

பார்முலா 1 கார் பந்தயம் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 18-வது சுற்றான மெக்சிகன் கிராண்ட்பிரி போட்டி மெக்சிகோ சிட்டி ஓடுதளத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

மெக்சிகோ சிட்டி,

பார்முலா1 கார் பந்தயம்: 305.354 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த பந்தயத்தில் அதிவேகமாக காரை செலுத்திய நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 36 நிமிடம் 48.904 வினாடியில் இலக்கை கடந்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த சீசனில் ஹாமில்டன் பெற்ற 10-வது வெற்றி இதுவாகும். ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) 2-வது இடத்தையும், பின்லாந்து வீரர் வால்டெரி போட்டஸ் (மெர்சிடஸ் அணி) 3-வது இடத்தையும் பெற்றனர். 18-வது சுற்று முடிவில் லீவிஸ் ஹாமில்டன் 363 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். வால்டெரி போட்டஸ் 289 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். அடுத்த சுற்றான அமெரிக்க கிராண்ட்பிரி போட்டி வருகிற 3-ந் தேதி நடக்கிறது.

Next Story