பிற விளையாட்டு

ஜிம்பாப்வே அணியின் கிரிக்கெட் இயக்குனராக அந்நாட்டு முன்னாள் வீரர் ஹாமில்டன் மசகட்சா நியமனம் + "||" + Hamilton Masakadza appointed as Zimbabwe's first director of cricket

ஜிம்பாப்வே அணியின் கிரிக்கெட் இயக்குனராக அந்நாட்டு முன்னாள் வீரர் ஹாமில்டன் மசகட்சா நியமனம்

ஜிம்பாப்வே அணியின் கிரிக்கெட் இயக்குனராக அந்நாட்டு முன்னாள் வீரர் ஹாமில்டன் மசகட்சா நியமனம்
ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரர் ஹாமில்டன் மசகட்சா அந்த நாட்டு கிரிக்கெட்டின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* ஒலிம்பிக் தகுதி சுற்று ஆக்கி போட்டியில் இந்தியா-ரஷியா அணிகள் மோதும் ஆட்டம் புவனேஸ்வரத்தில் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த பின்கள வீரர் வருண்குமார் பயிற்சியின் போது வலது தோள்பட்டையில் காயமடைந்ததால் அவருக்கு பதிலாக பிரேந்திர லக்ரா சேர்க்கப்பட்டுள்ளார்.


* பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி தரவரிசையில் 2 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளது.

* சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரர் ஹாமில்டன் மசகட்சா அந்த நாட்டு கிரிக்கெட்டின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று தொடரில், துபாயில் நேற்று நடந்த பிளே-ஆப் சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்காட்லாந்து அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை சாய்த்து உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. அமீரக அணி வெளியேற்றப்பட்டது. முன்னதாக நமிபியா அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் ஓமனை தோற்கடித்து உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.