நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச ஐ.சி.சி. அனுமதி


நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச ஐ.சி.சி. அனுமதி
x
தினத்தந்தி 1 Nov 2019 11:13 PM GMT (Updated: 1 Nov 2019 11:13 PM GMT)

நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச ஐ.சி.சி. அனுமதி அளித்துள்ளது.

 
* கடந்த ஆகஸ்டு மாதம் காலேவில் நடந்த இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 3 ஓவர்கள் பந்து வீசினார். பகுதி நேர சுழற்பந்து வீச்சாளரான வில்லியம்சனின் பந்து வீச்சு விதிமுறைக்கு புறம்பாக இருப்பதாக நடுவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) உத்தரவின் பேரில் அவர் இங்கிலாந்தில் உள்ள ஐ.சி.சி.யின் அங்கீகாரம் பெற்ற மையத்தில் தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்தினார். இதில் அவரது பந்து வீச்சில் எந்தவித விதிமுறை மீறலும் இல்லை என்று தெரியவந்துள்ளதாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. இனி அவர் தொடர்ந்து பந்து வீசலாம்.



 

 * மும்பையில் சமீபத்தில் நடந்த உலக இளையோர் செஸ் போட்டியில் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சென்னை மேல்அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவி ரக்‌ஷிதா வெண்கலப்பதக்கம் வென்றார். பதக்கம் வென்ற அவருக்கு பள்ளி சார்பில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு ரக்‌ஷிதாவின் உருவம் பொறித்த ‘பேட்ஜ்’ அணிந்து வரவேற்பு அளித்தனர்.

* இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கு முன்பாக பயிற்சியில் ஈடுபட்ட போது பந்து தாக்கி வலது கால் பெருவிரலில் காயமடைந்தார். ஓய்வில் இருந்த மந்தனா உடல் தகுதியை எட்டி விட்டதால் தற்போது வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியினருடன் இணைய இன்று அங்கு புறப்பட்டு செல்கிறார்.

* இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் புஜாரா நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘முதல்முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் ஆடுவதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கிறேன். பகல்-இரவு டெஸ்ட் போட்டியை பொறுத்தமட்டில் இளஞ் சிவப்பு நிற பந்தின் தன்மைக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்வது தான் சவாலான விஷயமாக இருக்கும். சூரியன் மறையும் சமயத்தில் இந்த பந்தை சரியாக கணித்து ஆடுவதில் சற்று சிரமம் இருக்கலாம். ஆனால் இத்தகைய பந்தில் தொடர்ந்து விளையாடும் போது பழக்கமாகி விடும். சிவப்பு நிற பந்தில் இருந்து இளஞ் சிவப்பு நிற பந்தில் விளையாட நமது ஆட்ட முறையில் பெரிய அளவில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இரண்டுமே 5 நாள் கொண்ட டெஸ்ட் போட்டி தான்’ என்றார்.


Next Story