தேசிய ஜூனியர் தடகளம்: தமிழக அணியில் 148 வீரர்-வீராங்கனைகள்


தேசிய ஜூனியர் தடகளம்: தமிழக அணியில் 148 வீரர்-வீராங்கனைகள்
x
தினத்தந்தி 1 Nov 2019 11:23 PM GMT (Updated: 1 Nov 2019 11:23 PM GMT)

தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக அணியில் 148 வீரர்-வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

சென்னை,

35-வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் இன்று (சனிக்கிழமை) முதல் 6-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக தடகள அணியை, தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா அறிவித்துள்ளார். அணியில் மொத்தம் 148 பேர் இடம் பிடித்துள்ளனர். ஆண்கள் அணியில் அருண்குமார் (100 மீட்டர் ஓட்டம்), அவினாஷ் (400 மீட்டர் ஓட்டம்), கவுரவ் யாதவ் (800 மீட்டர் ஓட்டம்), சதீஷ்குமார் (5 ஆயிரம், 10 ஆயிரம் மீட்டர் ஓட்டம்), ஹரேஷ் ராம் (200 மீட்டர் ஓட்டம், 110 மீட்டர் தடை ஓட்டம்), எபிநேசர் (குண்டு எறிதல், வட்டு எறிதல்) உள்பட 72 வீரர்களும், பெண்கள் அணியில் ஷெரின் (100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல்), ரோஷினி (200, 400 மீட்டர் ஓட்டம்), ஐஸ்வர்யா (100 மீட்டர் தடை ஓட்டம், டிரிபிள்ஜம்ப்), தபிதா (100 மீட்டர் தடை ஓட்டம், நீளம் தாண்டுதல்) உள்பட 76 வீராங்கனைகளும் இடம் பெற்றுள்ளனர்.

Next Story