ஜெர்மனியில் நடந்த சார்லோர்லக்ஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி: இந்திய வீரர் லக்‌ஷயா சென் வெற்றி


ஜெர்மனியில் நடந்த சார்லோர்லக்ஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி: இந்திய வீரர் லக்‌ஷயா சென் வெற்றி
x
தினத்தந்தி 3 Nov 2019 11:04 PM GMT (Updated: 3 Nov 2019 11:04 PM GMT)

ஜெர்மனியில் நடந்த சார்லோர்லக்ஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீரர் லக்‌ஷயா சென் வெற்றிபெற்றார்.

* துபாயில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்றின் இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியாவை தோற்கடித்து கோப்பையை தட்டிச்சென்றது. இதில் பப்புவா நிர்ணயித்த 129 ரன்கள் இலக்கை நெதர்லாந்து அணி 19 ஓவர்களில் எட்டிப்பிடித்தது.

* “இந்திய ஆக்கி அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றாலும் எனது பணி இன்னும் முடிவடையவில்லை. ஒலிம்பிக் பதக்கமேடையில் ஏற வேண்டும் என்பதே எனது கனவு. ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ளன. அதற்குள் முன்னேற்றம் காண வேண்டும், அடிப்படை திட்டத்தை சரியாக செயல்படுத்தினால் சாதகமான முடிவு தானாக வந்து சேரும் என்று வீரர்களிடம் சொல்லி இருக்கிறேன். ஆட்டத்தை கச்சிதமாக நிறைவு செய்வதிலும், தடுப்பாட்ட யுக்தியில் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்’ என்று இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் பயிற்சியாளர் கிரஹாம் ரீட் கூறியுள்ளார்.

* ஜெர்மனியில் நடந்த சார்லோர்லக்ஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் 17-21, 21-18, 21-16 என்ற செட் கணக்கில் சீனாவின் வெங் ஹாங் யாங்கை வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றினார்.

Next Story