பிற விளையாட்டு

தேசிய ஜூனியர் தடகளம்: தமிழக வீராங்கனை தபிதா புதிய சாதனை + "||" + National Junior Athletics: The Player of Tamil Nadu Tabitha's new record

தேசிய ஜூனியர் தடகளம்: தமிழக வீராங்கனை தபிதா புதிய சாதனை

தேசிய ஜூனியர் தடகளம்: தமிழக வீராங்கனை தபிதா புதிய சாதனை
தேசிய ஜூனியர் தடகள போட்டியில், தமிழக வீராங்கனை தபிதா புதிய சாதனை படைத்தார்.
குண்டூர்,

35-வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை தபிதா 13.70 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இதற்கு முன்பு கடந்த ஆண்டில் கேரள வீராங்கனை அபர்ணா ராய் 13.76 வினாடியில் பந்தய தூரத்தை கடந்ததே சாதனையாக இருந்தது. தபிதா நீளம் தாண்டுதலிலும் தங்கம் வென்று இருந்தார். சாதனை படைத்த தபிதா சென்னை பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியாளரும், மத்திய கலால் வரி சூப்பிரண்டுமான நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர் ஆவார்.தொடர்புடைய செய்திகள்

1. தேசிய சீனியர் ஸ்குவாஷ்: தமிழக வீராங்கனை ஜோஸ்னா கால்இறுதிக்கு தகுதி
77-வது தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நேற்று தொடங்கியது.