பிற விளையாட்டு

சீன ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா தோல்வி - காஷ்யப், சாய் பிரனீத் முன்னேற்றம் + "||" + Off-colour Saina bows out, Kashyap cruises into second round of China Open

சீன ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா தோல்வி - காஷ்யப், சாய் பிரனீத் முன்னேற்றம்

சீன ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா தோல்வி - காஷ்யப், சாய் பிரனீத் முன்னேற்றம்
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தோல்வி அடைந்தார். இந்திய வீரர்கள் காஷ்யப், சாய் பிரனீத் ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
புஜோவ்,

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி புஜோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை சாய்னா நேவால், 22-ம் நிலை வீராங்கனையான சீனாவின் காய் யான் யானை சந்தித்தார். 24 நிமிடமே நடந்த இந்த ஆட்டத்தில் சாய்னா நேவால் 9-21, 12-21 என்ற நேர்செட்டில் காய் யான் யானிடம் தோல்வி கண்டு நடையை கட்டினார்.


ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் சாய்னாவின் கணவரும், தரவரிசையில் 25-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரருமான காஷ்யப் 21-14, 21-13 என்ற நேர்செட்டில் 21-ம் நிலை வீரரான சித்திகோம் தம்மாசினை (தாய்லாந்து) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 43 நிமிடம் நீடித்தது.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் 15-21, 21-12, 21-10 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் டாமி சுஜியர்டோவை சாய்த்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு 52 நிமிடம் தேவைப்பட்டது. இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வர்மா 18-21, 18-21 என்ற நேர்செட்டில் ஹாங்காங் வீரர் லீ செக் யுவிடம் தோற்று ஏமாற்றம் அளித்தார்.

கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பிரனாவ் ஜெர்ரி சோப்ரா-சிக்கி ரெட்டி ஜோடி 14-21, 14-21 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் வாங் சி லின்-செங் சி யா இணையிடம் தோல்வி அடைந்து வெளியேறியது.