பிற விளையாட்டு

மாநில கூடைப்பந்து: இந்தியன் வங்கி, அரைஸ் ஸ்டீல் அணிகள் ‘சாம்பியன்’ + "||" + State Basketball: Indian Bank, Aris Steel Teams Champion

மாநில கூடைப்பந்து: இந்தியன் வங்கி, அரைஸ் ஸ்டீல் அணிகள் ‘சாம்பியன்’

மாநில கூடைப்பந்து: இந்தியன் வங்கி, அரைஸ் ஸ்டீல் அணிகள் ‘சாம்பியன்’
மாநில கூடைப்பந்து போட்டியில், இந்தியன் வங்கி, அரைஸ் ஸ்டீல் அணிகள் சாம்பியன் பட்டம் வென்றது.
சென்னை,

தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில் மாநில கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் கடைசி நாளான நேற்று நடந்த ஆண்கள் பிரிவு அரைஇறுதி லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியன் வங்கி அணி 90-81 என்ற புள்ளி கணக்கில் வருமான வரி அணியை வீழ்த்தி 3-வது வெற்றியை ருசித்ததுடன் சாம்பியன் பட்டத்தையும் சொந்தமாக்கியது. 2 வெற்றி, ஒரு தோல்வி கண்ட வருமான வரி அணி 2-வது இடம் பெற்றது. பெண்கள் பிரிவு அரைஇறுதி லீக் ஆட்டம் ஒன்றில் அரைஸ் ஸ்டீல் அணி 65-64 என்ற புள்ளி கணக்கில் சங்கம் கிளப் அணியை சாய்த்து 3-வது வெற்றியை பெற்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் தனதாக்கியது. 2 வெற்றி, ஒரு தோல்வி கண்ட சங்கம் கிளப் அணி 2-வது இடம் பிடித்தது.


பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் இந்தியன் வங்கி பொதுமேலாளர் நாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பையை வழங்கினார். தமிழ்நாடு கூடைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, சீனியர் துணைத்தலைவர் செந்தில் தியாகராஜன், பொருளாளர் ஆந்திரபதி உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மாநில கூடைப்பந்து: செயின்ட் ஜோசப்ஸ் அணி ‘சாம்பியன்’
மாநில கூடைப்பந்து போட்டியில், செயின்ட் ஜோசப்ஸ் அணி ‘சாம்பியன்’ பட்டம் வென்றது.