பிற விளையாட்டு

சீன ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதியில் இந்திய ஜோடி தோல்வி + "||" + Chinese Open Badminton: Indian pair lose in semi-final

சீன ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதியில் இந்திய ஜோடி தோல்வி

சீன ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதியில் இந்திய ஜோடி தோல்வி
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியின் அரைஇறுதியில் இந்திய ஜோடி தோல்வியடைந்தது.
புஜோவ்,

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி புஜோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, நம்பர் ஒன் இணையான மார்கஸ் பெர்னால்டி ஜிடோன்-கெவின் சஞ்சயா சுகாமுல்ஜோவை (இந்தோனேஷியா) சந்தித்தது. 40 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சாத்விக் சாய்ராஜ்-சிராக் ஷெட்டி ஜோடி 16-21, 20-22 என்ற நேர்செட்டில் தோல்வி கண்டு வெளியேறியது. இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து அரைஇறுதியில் சென்னை-கோவா அணிகள் இன்று பலப்பரீட்சை
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையில் இன்று நடைபெறும் அரைஇறுதியின் முதலாவது சுற்று ஆட்டத்தில் சென்னை-கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.