ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் - ஐ.சி.சி வெளியிட்ட ரோகித் சர்மாவின் புகைப்படம்


ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர்  - ஐ.சி.சி வெளியிட்ட ரோகித் சர்மாவின் புகைப்படம்
x
தினத்தந்தி 13 Nov 2019 11:11 PM GMT (Updated: 13 Nov 2019 11:11 PM GMT)

ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் சாதனை படைக்கப்பட்டதன் 5-வது ஆண்டு தினத்தையொட்டி ரோகித்சர்மாவின் புகைப்படத்தை ஐ.சி.சி வெளியிட்டது.


* 2014-ம் ஆண்டு நவம்பர் 13-ந் தேதி கொல்கத்தாவில் நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா 173 பந்துகளில் 264 ரன்கள் (33 பவுண்டரி, 9 சிக்சர்) குவித்து உலக சாதனை படைத்தார். ஒருநாள் போட்டியில் இது தான் தனிநபர் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. இந்த சாதனை படைக்கப்பட்டதன் 5-வது ஆண்டு தினத்தை ரோகித்சர்மாவின் புகைப்படத்துடன் நினைவூட்டி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டுவிட்டரில் நேற்று பதிவிட்டுள்ளது. அதில், ‘இந்த சாதனையில் மோசமான ஒரு பங்கும் உண்டு. அதாவது ரோகித் சர்மா 4 ரன்னில் இருந்த போது கேட்ச்சை கோட்டைவிட்டனர்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

* ஸ்பெயின் கால்பந்து அணிக்காக அதிக கோல் (59 கோல்கள்) அடித்தவரான 37 வயது டேவிட் வில்லா அடுத்த மாதத்துடன் கால்பந்து போட்டியில் இருந்து முழுமையாக விடைபெற இருப்பதாக அறிவித்துள்ளார்.

* டெல்லி வந்து இருக்கும் காமன்வெல்த் விளையாட்டு பெடரேஷன் தலைவர் லூயிஸ் மார்ட்டின், தலைமை செயல் அதிகாரி டேவிட் கிரிவெம்பெர்க் ஆகியோரை இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா, பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா, மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ மற்றும் ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் இன்று சந்தித்து பேச இருக்கிறார்கள். 2022-ம் ஆண்டு பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதல் பந்தயம் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து இந்த சந்திப்பில் முக்கியமாக விவாதிக்கப்பட இருக்கிறது.



Next Story