பிற விளையாட்டு

ஆணழகன் போட்டியில் பதக்கம் வென்று தந்தை-மகன் சாதனைசென்னையைச் சேர்ந்தவர்கள் + "||" + Medal of honor in the competition Father-Son Adventure Belonging to Chennai

ஆணழகன் போட்டியில் பதக்கம் வென்று தந்தை-மகன் சாதனைசென்னையைச் சேர்ந்தவர்கள்

ஆணழகன் போட்டியில் பதக்கம் வென்று தந்தை-மகன் சாதனைசென்னையைச் சேர்ந்தவர்கள்
உலக ஆணழகன் போட்டி தென்கொரியாவில் நடந்தது. 37 நாடுகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களது உடல் கட்டமைப்பை வெளிப்படுத்தினர்.
தாம்பரம்,

உலக ஆணழகன் போட்டி தென்கொரியாவில் நடந்தது. 37 நாடுகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களது உடல் கட்டமைப்பை வெளிப்படுத்தினர். இதில் 20 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தமிழக வீரர் பெஞ்சமின் ஜெரால்டு 2-வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதே போட்டியில் சீனியர் பிரிவில் பங்கேற்ற இவரது தந்தை ராஜேந்திரன் மணி 3-வது இடத்தை பெற்று வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.

சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மணி (வயது 46 ) கூறுகையில், ‘உலக ஆணழகன் போட்டியில் தந்தை, மகன் கலந்து கொண்டு பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இளம் தலைமுறையினர் இந்த போட்டிக்கு அதிக அளவில் வருவதற்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும். பள்ளிகளில், மாணவ, மாணவிகள் உடல்கட்டுக்கோப்புடன் இருக்கும் வகையில் அது தொடர்பான வகுப்புகளை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். ஆணழகன் போட்டியில் ஏராளமான பட்டங்களை வென்றுள்ள ராஜேந்திரன் மணி உடற்பயிற்சி கூடம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.