ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கால்இறுதிக்கு தகுதி சிந்து, காஷ்யப் தோல்வி


ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கால்இறுதிக்கு தகுதி சிந்து, காஷ்யப் தோல்வி
x
தினத்தந்தி 14 Nov 2019 10:00 PM GMT (Updated: 14 Nov 2019 9:37 PM GMT)

ஹாங்காங் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஹாங்காங்கில் நடந்து வருகிறது.

ஹாங்காங், 

ஹாங்காங் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஹாங்காங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-11, 15-21, 21-19 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரர் சவுரப் வர்மாவை தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார். மற்ற ஆட்டங்களில் காஷ்யப் (இந்தியா) 21-12, 21-23, 10-21 என்ற செட் கணக்கில் சீன தைபே வீரர் சோய் டின் சென்னிடமும், பிரனாய் (இந்தியா) 12-21, 19-21 என்ற நேர்செட்டில் இந்தோனேஷியா வீரர் ஜோனதன் கிறிஸ்டியிடமும் தோல்வியை தழுவினர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 18-21, 21-11, 16-21 என்ற செட் கணக்கில் தாய்லாந்து வீராங்கனை பூசனன் ஓங்பாம்ருங்பானிடம் போராடி பணிந்தார். இந்த ஆட்டம் 69 நிமிடம் நீடித்தது. உலக சாம்பியன் பட்டம் வென்ற பிறகு எந்த போட்டியிலும் ஜொலிக்காத சிந்து கடந்த 6 தொடர்களில் 2-வது சுற்றை கூட கடக்க முடியாமல் வெளியேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story