பிற விளையாட்டு

கொரியா பேட்மிண்டனில் இருந்து சாய்னா விலகல் + "||" + Saina's departure from Korea badminton

கொரியா பேட்மிண்டனில் இருந்து சாய்னா விலகல்

கொரியா பேட்மிண்டனில் இருந்து சாய்னா விலகல்
கொரியா பேட்மிண்டன் போட்டியிலிருந்து சாய்னா விலகி உள்ளார்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: போபண்ணா விலகல்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசிய-ஓசியானா குரூப்1 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் வருகிற 29, 30-ந் தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்திய அணியில் இடம் பெற்று இருந்த சீனியர் வீரரான ரோகன் போபண்ணா தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகி உள்ளார். இது குறித்து அவர் அணியை வெளியில் இருந்து வழிநடத்தும் கேப்டன் ரோகித் ராஜ்பாலுக்கு தெரிவித்துள்ளார். இது பற்றி கேப்டன் ரோகித் ராஜ்பால் கருத்து தெரிவிக்கையில், ‘இந்திய அணியில் இருந்து ரோகன் போபண்ணா விலகி இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. அவர் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டியிருப்பதால் விலகி உள்ளார். அவருக்கு பதிலாக ஜீவன் நெடுஞ்செழியன் அணியில் இடம் பெறுவார்’ என்றார்.


கொரியா பேட்மிண்டனில் இருந்து சாய்னா விலகல்

கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி குவாங்ஜூவில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் இருந்து இந்திய முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் விலகி இருக்கிறார். சிந்து இந்த போட்டியில் விளையாடவில்லை. இதனால் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் யாரும் களம் காணவில்லை. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், சமீர் வர்மா, சவுரப் வர்மா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

காமன்வெல்த் சாம்பியனுடன் விஜேந்தர் சிங் மோதுகிறார்

தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வரும் இந்திய வீரர் விஜேந்தர்சிங் தனது அடுத்த பந்தயத்தில் 2 முறை காமன்வெல்த் சூப்பர் மிடில் வெயிட் சாம்பியனான கானா நாட்டு வீரர் சார்லஸ் அடாமுவை சந்திக்கிறார். இந்த போட்டி துபாயில் வருகிற 22-ந் தேதி நடக்கிறது. 11 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றியை ருசித்துள்ள விஜேந்தர்சிங் இந்த மோதலுக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மும்பை அணிக்கு வேகப்பந்து வீச்சாளர்களை வாங்கியது குறித்து ஜாகீர்கான் விளக்கம்

அடுத்த சீசன் ஐ.பி.எல். போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னி ஆகியோரை வாங்கியது ஏன்? என்பது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குனர் ஜாகீர்கான் கருத்து தெரிவிக்கையில், ‘ஹர்திக் பாண்ட்யா, பும்ரா ஆகியோர் முதுகுவலி பிரச்சினையில் சிக்கி இருக்கிறார்கள். இதனால் பந்து வீச்சை பலப்படுத்தும் நோக்கில் தான் தவால் குல்கர்னி, டிரென்ட் பவுல்ட் ஆகியோரை வீரர்கள் பரிமாற்றம் மூலம் வாங்கினோம்’ என்று கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. உலக ஸ்குவாஷ் போட்டியில் இருந்து இந்திய பெண்கள் அணி விலகல்
உலக ஸ்குவாஷ் போட்டியில் இருந்து இந்திய பெண்கள் அணி விலகியுள்ளது.
2. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி விலகல்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து ‘நம்பர் ஒன்’ மங்கை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி விலகியுள்ளார்.
3. சவுராஷ்டிரா அணியில் இருந்து விலகினார், ஜாக்சன்
சவுராஷ்டிரா அணியில் இருந்து ஷெல்டன் ஜாக்சன் விலகியுள்ளார்.
4. ஜனாதிபதி தேர்தலில் இருந்து புளும்பெர்க் விலகல்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுவதாக மைக்கேல் புளும்பெர்க் அறிவித்துள்ளார்.
5. தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து டூ பிளஸ்சிஸ் விலகல்
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து டூ பிளஸ்சிஸ் இன்று விலகியுள்ளார்.