பிற விளையாட்டு

பிங்க் நிற பந்து: மணிக்கட்டை அதிகம் பயன்படுத்தும் சுழற்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை கணிப்பது கடினம் - ஹர்பஜன்சிங் + "||" + Pink ball: It is difficult to predict the bowling of bowlers who use the wrist too much - Harbhajan Singh

பிங்க் நிற பந்து: மணிக்கட்டை அதிகம் பயன்படுத்தும் சுழற்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை கணிப்பது கடினம் - ஹர்பஜன்சிங்

பிங்க் நிற பந்து: மணிக்கட்டை அதிகம் பயன்படுத்தும் சுழற்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை கணிப்பது கடினம் - ஹர்பஜன்சிங்
பிங்க் நிற பந்தில் மணிக்கட்டை அதிகம் பயன்படுத்தும் சுழற்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை கணிப்பது கடினம் என்று இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன்சிங் கூறியுள்ளார்.

* வங்காளதேசத்தில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியின் போது சக வீரர் அராபத் சன்னியை கன்னத்தில் அறைந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹூசைனுக்கு வங்காளதேச கிரிக்கெட் வாரிய தொழில்நுட்ப கமிட்டி 5 ஆண்டு தடை விதித்துள்ளது.


* இங்கிலாந்து-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி நியூசிலாந்தில் உள்ள மவுன்ட்மாங்கானுவில் இந்திய நேரப்படி நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கி நடக்கிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 1 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் அளித்த ஒரு பேட்டியில், ‘பிங்க் பால் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை ஆண்டுதோறும் நடத்தும் வகையில் இந்திய கிரிக்கெட் வாரியம் தனது போட்டி அட்டவணையை தயாரிக்க வேண்டும். பனிப்பொழிவு தாக்கத்தை கட்டுப்படுத்தி விட்டால் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்துவதில் எந்த பிரச்சினையும் இருக்காது’ என்றார்.

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ்சிங் அளித்த ஒரு பேட்டியில், ‘கிறிஸ் லின் (ஆஸ்திரேலியா) அபுதாபி 10 ஓவர் கிரிக்கெட்டில் நம்ப முடியாத அளவுக்கு அருமையாக அடித்து (30 பந்தில் 91 ரன்) ஆடினார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிறிஸ் லின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சில நல்ல தொடக்கங்களை கொடுத்து இருக்கிறார். அவரை ஏன்? அந்த அணி நிர்வாகம் தக்கவைத்து கொள்ளவில்லை என்பது எனக்கு புரியவில்லை. இதனை நான் மோசமான முடிவாக கருதுகிறேன். இது குறித்து நான் அந்த அணியின் உரிமையாளரான நடிகர் ஷாருக்கானுக்கு கண்டிப்பாக குறுந்தகவல் அனுப்புவேன்’ என்றார்.

* பிங்க் நிற பந்தில் மணிக்கட்டை அதிகம் பயன்படுத்தி பவுலிங் செய்யும் சுழற்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை கணிப்பது கடினம் என்று இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன்சிங் கூறியுள்ளார்.

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் மனைவி சாக்‌ஷிக்கு நேற்று 31-வது பிறந்த நாளாகும். இதையொட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் டோனி தனது மனைவி மற்றும் மகள் ஜிவாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, காட்டின் ராணிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளது. இதேபோல் சென்னையின் எப்.சி. அணி நிர்வாகம் சார்பிலும் சாக்‌ஷிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.