பிற விளையாட்டு

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம் + "||" + World Cup shootout: Indian players disappointed

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம்

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம்
உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில், இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம் அளித்தனர்.
புடியன்,

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதி சுற்று போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தின் தகுதி சுற்றில், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையான மானு பாகெர் மொத்தம் 583 புள்ளிகள் எடுத்து 10-வது இடம் பிடித்ததுடன், இறுதிப்போட்டி வாய்ப்பையும் இழந்தார். இதேபோல் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனையான ராஹி சர்னோபாத் 566 புள்ளிகள் எடுத்து கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டார். ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய வீரர் அனிஷ் பன்வாலா 578 புள்ளியுடன் 10-வது இடமே பிடித்தார்.