ஆசிய வில்வித்தையில் இந்திய ஜோடி தங்கப்பதக்கம் வென்றது


ஆசிய வில்வித்தையில் இந்திய ஜோடி தங்கப்பதக்கம் வென்றது
x
தினத்தந்தி 27 Nov 2019 11:36 PM GMT (Updated: 27 Nov 2019 11:36 PM GMT)

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஜோடி தங்கப்பதக்கம் வென்றது.

பாங்காக்,

21-வது ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்தது. இதில் நேற்று நடந்த காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் அபிஷேக் வர்மா-ஜோதி சுரேகா ஜோடி 158-151 என்ற புள்ளி கணக்கில் சீன தைபேயின் யி ஹசுன் சென்-சிக் லுக் சென் இணையை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. இதன் ஆண்கள் அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் அபிஷேக் வர்மா, ரஜத் சவுகான், மோகன் பரத்வாஜ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 232-233 என்ற புள்ளி கணக்கில் தென் கொரியா அணியிடம் தோற்று வெள்ளிப்பதக்கம் பெற்றது. பெண்கள் அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் ஜோதி சுரேகா, முஸ்கன் கிரார், பிரியா குர்ஜார் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 215-231 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியா அணியிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தது. இந்த போட்டியில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலப்பதக்கத்தை வென்றது.

Next Story