பிற விளையாட்டு

சையத் மோடி பேட்மிண்டன்: சவுரப் வர்மா, ரிதுபர்னா அரைஇறுதிக்கு முன்னேற்றம் - ஸ்ரீகாந்த் தோல்வி + "||" + Syed Modi Badminton: Sourabh Verma, Rituparna Advancement - Srikanth's failure

சையத் மோடி பேட்மிண்டன்: சவுரப் வர்மா, ரிதுபர்னா அரைஇறுதிக்கு முன்னேற்றம் - ஸ்ரீகாந்த் தோல்வி

சையத் மோடி பேட்மிண்டன்: சவுரப் வர்மா, ரிதுபர்னா அரைஇறுதிக்கு முன்னேற்றம் - ஸ்ரீகாந்த் தோல்வி
சையத் மோடி பேட்மிண்டன் போட்டியில், சவுரப் வர்மா, ரிதுபர்னா அரைஇறுதிக்கு முன்னேறினர்.
லக்னோ,

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி லக்னோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சவுரப் வர்மா 21-19, 21-16 என்ற நேர்செட்டில் தாய்லாந்து வீரர் குன்லாவுத் விதிச்சர்னை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 18-21, 19-21 என்ற நேர்செட்டில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான சன் வான் ஹோவிடம் (கொரியா) தோல்வி கண்டு வெளியேறினார்.


பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டத்தில் முன்னாள் தேசிய சாம்பியனான இந்தியாவின் ரிதுபர்னா தாஸ் 24-26, 21-10, 21-19 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனை சுருதி முன்டாடாவை தோற்கடித்து அரைஇறுதியை எட்டினார்.