பிற விளையாட்டு

சையத் மோடி பேட்மிண்டன்: கோப்பையை கோட்டை விட்டார், சவுரப் + "||" + Syed Modi International: Sourabh Verma loses in final

சையத் மோடி பேட்மிண்டன்: கோப்பையை கோட்டை விட்டார், சவுரப்

சையத் மோடி பேட்மிண்டன்: கோப்பையை கோட்டை விட்டார், சவுரப்
சையத் மோடி பேட்மிண்டன் போட்டியில், சவுரப் வர்மா கோப்பையை தவறவிட்டார்.
லக்னோ,

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி லக்னோவில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 36-வது இடம் வகிக்கும் இந்திய வீரர் சவுரப் வர்மா, 26-ம் நிலை வீரரான வாங் ஜூ வெய்யை (சீனதைபே) எதிர்கொண்டார். 48 நிமிடங்கள் நடந்த இந்த மோதலில் சவுரப் வர்மா 15-21, 17-21 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்து கோப்பையை கோட்டை விட்டார்.


இதன் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் (ஸ்பெயின்) 21-12, 21-16 என்ற நேர் செட் கணக்கில் பித்தயாபோர்ன் சைவானை (தாய்லாந்து) தோற்கடித்து பட்டத்தை கைப்பற்றினார்.