பிற விளையாட்டு

மாநில கைப்பந்து சாம்பியன்ஷிப்: டாக்டர் சிவந்தி கிளப் அணி ‘சாம்பியன்’ + "||" + State Volleyball Championship: Dr. Sivanthi Club Team Champion

மாநில கைப்பந்து சாம்பியன்ஷிப்: டாக்டர் சிவந்தி கிளப் அணி ‘சாம்பியன்’

மாநில கைப்பந்து சாம்பியன்ஷிப்: டாக்டர் சிவந்தி கிளப் அணி ‘சாம்பியன்’
மாநில கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில், டாக்டர் சிவந்தி கிளப் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
மதுரை,

மதுரை மற்றும் தேனி மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் 69-வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி மதுரை நாகமலையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் 48 அணிகள் கலந்து கொண்டன. நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிப்போட்டியில் டாக்டர் சிவந்தி கிளப் (சென்னை)-பி.கே.ஆர். (கோபி) அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் டாக்டர் சிவந்தி கிளப் அணி 25-21, 25-15, 26-24 என்ற செட் கணக்கில் பி.கே.ஆர். அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் எஸ்.டி.ஏ.டி. அணி 25-20, 25-15 என்ற செட் கணக்கில் தமிழ்நாடு போலீஸ் அணியை சாய்த்தது.