பிற விளையாட்டு

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசா எப்.சி.- ஐதராபாத் எப்.சி. அணிகள் இன்று மோதல் + "||" + ISL Football: Odisha FC - Hyderabad FC Teams clash today

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசா எப்.சி.- ஐதராபாத் எப்.சி. அணிகள் இன்று மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசா எப்.சி.- ஐதராபாத் எப்.சி. அணிகள் இன்று மோதல்
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி.- ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதுகின்றன.

* இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் இன்னும் கால்முட்டி காயத்தில் இருந்து முழுமையாக மீளவில்லை. இதனால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டு மயங்க் அகர்வால் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது.

* சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) சேர்மனாக இருக்கும் இந்தியாவைச் சேர்ந்த ஷசாங் மனோகரின் பதவி காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடைகிறது. அதன் பிறகு மேலும் 2 ஆண்டுகள் பதவியில் நீடிக்க வாய்ப்பு இருந்த போதிலும், அதில் தொடர விருப்பம் இல்லை என்று ஷசாங் மனோகர் கூறியுள்ளார்.

* இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அளித்த ஒரு பேட்டியில், ‘தற்போது ஓய்வில் இருக்கும் டோனி அடுத்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடுவார். 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான வாய்ப்பில் தன்னை தயார்படுத்திக் கொண்டு, ஐ.பி.எல்.-க்கு பிறகு இந்திய அணிக்காக விளையாடுவதற்கு தான் நல்ல நிலையில் இருப்பதாக அவர் உணர்ந்தால், அவரால் ஆட முடியும்’ என்றார்.

* ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் புனேயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி.- ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதுகின்றன.

* இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் 26 வயதான ஹர்திக் பாண்ட்யாவுக்கு முதுகுவலி காயத்துக்காக கடந்த அக்டோபரில் ஆபரேஷன் செய்யப்பட்டது. இதனால் ஓய்வில் இருக்கும் அவர் ஜனவரி மாதம் கடைசியில் தொடங்கும் நியூசிலாந்து தொடரின் பாதியில் அணிக்கு திரும்புவதை இலக்காக கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.