பிற விளையாட்டு

உலக டூர் பேட்மிண்டன்: முதல் ஆட்டத்தில் சிந்து தோல்வி + "||" + World Tour Badminton: Sindhu lost in the first match

உலக டூர் பேட்மிண்டன்: முதல் ஆட்டத்தில் சிந்து தோல்வி

உலக டூர் பேட்மிண்டன்: முதல் ஆட்டத்தில் சிந்து தோல்வி
உலக டூர் பேட்மிண்டன் போட்டியில், முதல் ஆட்டத்தில் சிந்து தோல்வியடைந்தார்.
குவாங்ஜோவ்,

டாப்-8 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் குவாங்ஜோவ் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தனது முதலாவது ஆட்டத்தில் அகானே யமாகுச்சியை (ஜப்பான்) சந்தித்தார். 68 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான இந்த மோதலில் சிந்து 21-18, 18-21, 8-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார். சிந்து அடுத்த லீக்கில் இன்று சீனாவின் சென் யூ பேவை எதிர்கொள்கிறார். அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க இன்றைய ஆட்டத்தில் சிந்து கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.