பிற விளையாட்டு

உலக டூர் பேட்மிண்டன்: சிந்துவுக்கு ஆறுதல் வெற்றி + "||" + World Tour Badminton: Sindh consolation win

உலக டூர் பேட்மிண்டன்: சிந்துவுக்கு ஆறுதல் வெற்றி

உலக டூர் பேட்மிண்டன்: சிந்துவுக்கு ஆறுதல் வெற்றி
உலக டூர் பேட்மிண்டன் போட்டியில், சிந்துவுக்கு ஆறுதல் வெற்றிபெற்றார்.
குவாங்ஜோவ்,

முன்னணி 8 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் குவாங்ஜோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த நடப்பு சாம்பியனான பி.வி.சிந்து நேற்று தனது கடைசி லீக்கில் ஹி பிங்ஜியாவை (சீனா) எதிர்கொண்டார்.


தொடக்கத்தில் தடுமாறிய சிந்து முதல் செட்டில் 9-18 என்ற புள்ளி கணக்கில் பின்தங்கினார். அதன் பிறகு எழுச்சி பெற்ற சிந்து தொடர்ச்சியாக 9 புள்ளிகளை சேர்த்து 18-18 என்று சமனுக்கு கொண்டு வந்து, அதன் பிறகு முதல் செட்டை வசப்படுத்தினார். இதே உத்வேகத்தை 2-வது செட்டில் வெளிப்படுத்திய சிந்து 7-3, 11-6, 18-16 என்ற வகையில் முன்னிலை கண்டு இந்த செட்டையும் தனதாக்கினார். முடிவில் சிந்து 21-19, 21-19 என்ற நேர் செட் கணக்கில் 42 நிமிடங்களில் வெற்றி பெற்றார். சிந்துவுக்கு இது ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. முதல் 2 ஆட்டங்களில் அகானே யமாகுச்சி (ஜப்பான்), சென் யூ பே (சீனா) ஆகியோரிடம் தோற்றதன் மூலம் அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்டார்.


தொடர்புடைய செய்திகள்

1. மூணாறு நிலச்சரிவில் இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு அர்ஜூன் சம்பத் ஆறுதல்
மூணாறு நிலச்சரிவில் இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு அர்ஜூன் சம்பத் ஆறுதல் கூறினார்.
2. மூணாறு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அமைச்சர் ராஜலட்சுமி ஆறுதல்2
மூணாறு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அமைச்சர் ராஜலட்சுமி ஆறுதல்.
3. மூணாறு நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஜான் பாண்டியன் ஆறுதல்
மூணாறு நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஜான் பாண்டியன் ஆறுதல்.
4. மூணாறு நிலச்சரிவில் இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ராஜலட்சுமி ஆறுதல்
மூணாறு நிலச்சரிவில் இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ராஜலட்சுமி ஆறுதல்.
5. மூணாறு நிலச்சரிவில் பலியானவர்களின் உறவினர்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல்
மூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் உறவினர்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல் கூறினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை