பிற விளையாட்டு

‘ஒலிம்பிக் பதக்கத்தை நோக்கியே, ஈட்டி எறிகிறேன்’ + "||" + 'Toward Olympic medal, Throw spear - Neeraj Chopra

‘ஒலிம்பிக் பதக்கத்தை நோக்கியே, ஈட்டி எறிகிறேன்’

‘ஒலிம்பிக் பதக்கத்தை நோக்கியே, ஈட்டி எறிகிறேன்’
ஈட்டி எறிதல் விளையாட்டின், இளம் நம்பிக்கையாக திகழ்பவர் நீரஜ் சோப்ரா. அரியானாவை சேர்ந்தவரான இவர், கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை படைத்தவர்.
 ஈட்டி எறிதல் விளையாட்டில், இந்திய அணி வெற்றி காணாத சர்வதேச போட்டிகளிலும், வெற்றி கண்டு அசத்தியவர். அவரிடம் சிறு கலந்துரையாடல்.

ஈட்டி எறிதல் என்றவுடன் உங்கள் நினைவிற்கு வருவது எது?, மறக்கவேண்டிய சம்பவம் எது?

ஈட்டி எறிதல் விளையாட்டில் இந்திய அணிக்காக விளையாடுவதுதான், வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய சந்தோஷம். அதை என் றென்றும் நினைத்து பார்க்கிறேன். அதேசமயம் என்னுடைய ஈட்டி எறியும் ஸ்டைல், ஆரம்பத்தில் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அவற்றை எல்லாம் மறக்க நினைக்கிறேன்.எவ்விதமான சர்ச்சைகளை உண்டாக்கியது?

நான் ஈட்டி எறிவது கொஞ்சம் வித்தியாசமாக தெரியும். அதாவது வேகமாக ஓடிவந்து, எல்லைக்கோட்டிற்கு முன்பாகவே ஈட்டியை எறிந்துவிட்டு, குரங்கு போல கீழே தாவி திரும்புவேன். இதுபோன்ற ‘ஸ்டைல்’ நிறைய நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் நம் இந்தியாவில் குறைவாகவே ஊக்குவிக்கிறார்கள். அதனால் ஆரம்ப காலங்களில் பல சர்ச்சைகளுக்கு உள்ளாக வேண்டியிருந்தது. சிலர் இதை கிண்டல் செய்தனர். சிலர் அதை பெரும் சர்ச்சை ஆக்கி பார்த்தனர். ஆனால் சர்வதேச வெற்றிகளை பதிவு செய்ததும், இந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி கிடைத்தது.

இளம் வயதிலேயே ஈட்டி எறிதலில் பல சாதனைகளை நிகழ்த்தியிருக் கிறீர்கள். உங்களது அடுத்தக்கட்ட முயற்சி என்ன?

ஆசிய விளையாட்டுகளில் தடாலடியாக தங்கத்தை வென்றேன். அதேசமயம் குறைந்த வயதிலேயே அதிக தூரம் ஈட்டி எறிந்து சாதனைப்புரிந்தேன். ஆனால்... எனக்கு நெடுநாள் ஆசை ஒன்று இருக்கிறது. அதுதான் ஒலிம்பிக் ஆசை. இந்திய அணிக்காக ஈட்டி எறிந்து, தங்க பதக்கத்தை பறித்து வருவதுதான், என் ஆசை, கனவு. அதை நோக்கியே ஈட்டி எறிகிறேன். அதற்கான காலமும், சந்தர்ப்பமும் வெகுசீக்கிரமாகவே அமையும்.

நீங்கள் மேற்கொள்ளும் பயிற்சிகளை பற்றி கூறுங்கள்?

பயிற்சி சம்பந்தமான விஷயங்களை என்னுடைய பயிற்சியாளர், வூ ஹூன் கவனித்து கொள்கிறார். அவர் கூடைப்பந்தை உட்கார்ந்த இடத்தில் இருந்து குறிப்பார்த்து எறிய சொல்கிறார். தண்ணீருக்குள் நிற்க சொல்லி, ஈட்டி எறிதலை செய்து பார்க்க சொல்கிறார். கணக்கில்லாமல், ஓடச்சொல்கிறார். நீந்த சொல்கிறார். ஆனால் இறுதி வரை ஈட்டி எறிதலை பற்றி சொல்லி கொடுப்பதே இல்லை. 

காரணம் கேட்டால், அந்த திறமை உன்னிடமே இருக்கிறது. அதை நான் மெருகேற்றுகிறேன். மற்றபடி ‘யூ ஆர் வெரி குட்’ என்று என்னை தட்டிக் கொடுக்கிறார். அவர் சொல்வதும், செய்ய சொல்வதும், என்னை வலுப் படுத்துகிறது. நான் ஆரம்பத்தில் அவரது பேச்சை நம்பவில்லை. ஆனால் இப்போது நம்புகிறேன்.