பிற விளையாட்டு

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் கொல்கத்தாவை வீழ்த்தியது, கோவா அணி + "||" + ISL football Goa team beat kolkatta

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் கொல்கத்தாவை வீழ்த்தியது, கோவா அணி

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் கொல்கத்தாவை வீழ்த்தியது, கோவா அணி
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் கோவா அணி, கொல்கத்தாவை வீழ்த்தியது.

* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கோவாவில் நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தாவை தோற்கடித்தது. கோவா அணி 4 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வி என்று 15 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.- மும்பை சிட்டி அணிகள் மோதுகின்றன.


* ராவல்பிண்டியில் நடந்து வரும் பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் மழை பாதிப்புக்கு மத்தியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 3-வது நாள் முடிவில் 91.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 282 ரன்கள் எடுத்து இருந்தது. 4-வது நாளான நேற்றைய தினம் மழை மற்றும் மைதானம் ஈரப்பதம் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

* விஜயவாடாவில் நடந்த தென்மண்டல பல்கலைக்கழக டேபிள் டென்னிஸ் போட்டியில், பெண்கள் பிரிவின் இறுதிசுற்றில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி 3-2 என்ற செட் கணக்கில் உஸ்மானியா பல்கலைக்கழக அணியை வீழ்த்தி பட்டத்தை வென்றதுடன், அகில இந்திய பல்கலைக்கழக போட்டிக்கும் தகுதி பெற்றது.

* ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளருமான ரிக்கிபாண்டிங் அளித்த ஒரு பேட்டியில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிலும் வெளிநாட்டு பவுலர்களே அதிக கவனத்தை ஈர்க்கப்போகிறார்கள். குறிப்பாக பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா), கிறிஸ் வோக்ஸ் (இங்கிலாந்து) ஆகியோர் அதிக தொகைக்கு ஏலம் போக வாய்ப்புள்ளது. இதே போல் ஆல்-ரவுண்டர்கள் மேக்ஸ்வெல், ஸ்டோனிஷ், மிட்செல் மார்ஷ், ஜேம்ஷ் நீஷம், கிரான்ட்ஹோம் ஆகியோரும் நல்ல விலை போகலாம்’ என்றார்.

* தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர் நேற்று நியமிக்கப்பட்டார். அவர் 2023-ம் ஆண்டு வரை இந்த பதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அணியின் இடைக்கால இயக்குனராக இருந்த இனோச் நிக்வி உதவி பயிற்சியாளராக பணியாற்றுவார். 43 வயதான மார்க் பவுச்சர் தென்ஆப்பிரிக்க அணிக்காக 147 டெஸ்ட், 295 ஒருநாள் மற்றும் 25 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடியவர் ஆவார்.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு விமான சேவை நிறுத்தம்
சென்னை உள்பட 6 நகரங்களில் இருந்து கொல்கத்தாவுக்கு உள்நாட்டு விமான சேவை நிறுத்தப்படுவதாக கொல்கத்தா விமான நிலையம் அறிவித்துள்ளது.
2. 30 ஆண்டுகாலம் பெண்ணாக இருந்து திடீர் என ஆணாக மாறியவர் கணவர் அதிர்ச்சி
30 ஆண்டுகாலம் பெண்ணாக இருந்து திடீர் என ஆணாக மாறியவரால் கணவர் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.
3. மும்பை, கொல்கத்தா, ஜெய்ப்பூர், இந்தூரில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது - மத்திய அரசு
மும்பை, கொல்கத்தா, ஜெய்ப்பூர், இந்தூரில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...