பிற விளையாட்டு

தேசிய பள்ளி தடகளம்: 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை தபிதா சாதனை + "||" + National School Athletics: Tabitha's record in the 100-meter hurdles

தேசிய பள்ளி தடகளம்: 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை தபிதா சாதனை

தேசிய பள்ளி தடகளம்: 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை தபிதா சாதனை
தேசிய பள்ளி தடகள போட்டியில், 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை தபிதா சாதனை படைத்தார்.
சென்னை,

65-வது தேசிய பள்ளி விளையாட்டில் தடகள போட்டி பஞ்சாப் மாநிலம் சன்குருரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த மாணவிகளுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை தபிதா 13.76 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தையும் தனதாக்கினார். இதற்கு முன்பு கடந்த ஆண்டில் (2018) கேரள வீராங்கனை அபர்ணா ராய் 14.28 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. தேசிய சாதனை படைத்த தபிதா சென்னை பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியாளர் பி.நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர் ஆவார்.ஆசிரியரின் தேர்வுகள்...