பெட் கோப்பை டென்னிஸ்: 5 பேர் கொண்ட இந்திய அணியில் சானியா மிர்சா இடம் பிடித்தார்


பெட் கோப்பை டென்னிஸ்:  5 பேர் கொண்ட இந்திய அணியில் சானியா மிர்சா இடம் பிடித்தார்
x
தினத்தந்தி 24 Dec 2019 11:12 PM GMT (Updated: 24 Dec 2019 11:12 PM GMT)

பெட் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான 5 பேர் கொண்ட இந்திய அணியில் அனுபவ வீராங்கனை சானியா மிர்சாவும் இடம் பிடித்துள்ளார்.


* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கொல்கத்தாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 45-வது லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி.யை எதிர்கொள்கிறது.

* பெட் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான 5 பேர் கொண்ட இந்திய அணியில் அனுபவ வீராங்கனை சானியா மிர்சாவும் இடம் பிடித்துள்ளார். குழந்தை பெற்றதால் 2 ஆண்டுகள் ஓய்வில் இருந்த சானியா மிர்சா, 2020-ம் ஆண்டில் மறுபிரவேசம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.

* ரஞ்சி கிரிக்கெட்டில் முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வி அடைந்த தமிழக அணி தனது 3-வது லீக்கில் மத்திய பிரதேசத்தை (பி பிரிவு) சந்திக்கிறது. இந்த ஆட்டம் இந்தூரில் இன்று தொடங்குகிறது.

* ‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் ஏர் இந்தியா 7-0 என்ற கோல் கணக்கில் கோட்டூர் புல் மூனை பந்தாடியது. ஏர் இந்தியா அணியில் முகேஷ் கார்த்திக் 4 கோல்கள் அடித்தார். மற்றொரு ஆட்டத்தில் செயின்ட் பால்ஸ் மனமகிழ் கிளப் 6-1 என்ற கோல் கணக்கில் கனரக வாகன தொழிற்சாலை அணியை வீழ்த்தியது.

* பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரஷித் லத்தீப் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் மற்றொரு முன்னணி பங்கேற்கும் சூப்பர் சீரிஸ் கிரிக்கெட் தொடரை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முயற்சித்து வருகிறது. இது போன்ற தொடர்களின் மூலம் இந்த முன்னணி அணிகள் மற்ற உறுப்பினர்களை தனிமைப்படுத்த விரும்புகின்றன. இது நல்லதல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு மூன்று கிரிக்கெட் வாரியங்களுக்கு மட்டும் அதிக வருவாய் பகிர்வு திட்டம் கொண்டு வரப்பட்டு பிறகு அது கைவிடப்பட்டது. இதே போல் ‘சூப்பர்சீரிஸ்’ யோசனையும் சொதப்பி விடும்’ என்றார்.


Next Story