பிற விளையாட்டு

அகில இந்திய கராத்தே போட்டியில் அண்ணா பல்கலைக்கழகம் 2-வது இடம் + "||" + Anna University secured 2nd place in All India Karate Competition

அகில இந்திய கராத்தே போட்டியில் அண்ணா பல்கலைக்கழகம் 2-வது இடம்

அகில இந்திய கராத்தே போட்டியில் அண்ணா பல்கலைக்கழகம் 2-வது இடம்
அகில இந்திய கராத்தே போட்டியில் அண்ணா பல்கலைக்கழகம் 2-வது இடம் பிடித்தது.
சென்னை,

அகில இந்திய பல்கலைக்கழக கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடந்தது. 3 நாட்கள் நடந்த இந்த போட்டியில் பெண்கள் பிரிவில் பார்கத்துல்லா பகல்கலைக்கழக அணி (போபால்) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அண்ணா பல்கலைக்கழக அணி (சென்னை) 2-வது இடத்தை பிடித்தது. ஆண்கள் பிரிவில் பாடலிபுத்ரா பல்கலைக்கழக அணி (பாட்னா) முதலிடத்தை பிடித்தது. ஜபுல்புர் பல்கலைக்கழக அணி (மத்தியபிரதேசம்) 2-வது இடம் பெற்றது. பரிசளிப்பு விழாவுக்கு சத்யபாமா இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி வேந்தர் எஸ்.சுந்தர் மனோகரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க தலைவர் கராத்தே ஆர்.தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.ஆசிரியரின் தேர்வுகள்...