பிற விளையாட்டு

பெண்கள் கால்பந்து: தமிழக போலீஸ் அணி வெற்றி + "||" + Girls football: Tamil Nadu police team wins

பெண்கள் கால்பந்து: தமிழக போலீஸ் அணி வெற்றி

பெண்கள் கால்பந்து: தமிழக போலீஸ் அணி வெற்றி
பெண்கள் கால்பந்து போட்டியில், தமிழக போலீஸ் அணி வெற்றிபெற்றது.
சென்னை,

வெற்றி மற்றும் மாபா அறக்கட்டளை சார்பில் விவேகானந்தர் கோப்பைக்கான மாநில அளவிலான கல்லூரி கால்பந்து போட்டி சென்னை ஆவடியில் உள்ள நசரத் கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் குருநானக் கல்லூரி அணி 3-2 என்ற கோல் கணக்கில் லயோலாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரைஇறுதியில் வேல்ஸ் பல்கலைக்கழக அணி 1-0 என்ற கோல் கணக்கில் தியாகராயா அணியை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. நேரு பார்க்கில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் குருநானக்-வேல்ஸ் அணிகள் மோதுகின்றன.


பெண்கள் அணிகள் இடையிலான மாநில கால்பந்து போட்டி நசரத் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் லீக் ஆட்டங்களில் இம்மாகுலட் அணி 7-0 என்ற கோல் கணக்கில் பாஸ்ட் டிராக் அணியையும், செயின்ட் மேரிஸ் அணி (சேலம்) 1-0 என்ற கோல் கணக்கில் ஐ.எச்.எம். அணியையும், என்.எல்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் சாய் அணியையும், தமிழ்நாடு போலீஸ் அணி 7-0 என்ற கோல் கணக்கில் எச்.சி.எல். அணியையும் தோற்கடித்தன.

தொடர்புடைய செய்திகள்

1. பெண்கள் கால்பந்து: மதுரை பல்கலைக்கழக அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
பெண்கள் கால்பந்து போட்டியில், மதுரை பல்கலைக்கழக அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.