பிற விளையாட்டு

தேசிய இளையோர் கபடியில் தமிழக பெண்கள் அணிக்கு வெள்ளிப்பதக்கம் + "||" + In the National Youth kabaddi Silver for Tamil Nadu women's team

தேசிய இளையோர் கபடியில் தமிழக பெண்கள் அணிக்கு வெள்ளிப்பதக்கம்

தேசிய இளையோர் கபடியில் தமிழக பெண்கள் அணிக்கு வெள்ளிப்பதக்கம்
தேசிய இளையோர் கபடியில் தமிழக பெண்கள் அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.
கவுகாத்தி,

கவுகாத்தியில் நடந்து வரும் தேசிய இளையோர் விளையாட்டு போட்டியில் 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் கபடி போட்டியில் இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு-அரியானா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக அரங்கேறிய இந்த போட்டியில் தமிழக அணி 20-25 என்ற புள்ளி கணக்கில் அரியானாவிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தது.


கைப்பந்து போட்டியில் 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் தமிழக அணி 25-4, 25-14, 25-12 என்ற நேர்செட்டில் அசாமை எளிதில் தோற்கடித்து 3-வது வெற்றியை ருசித்தது.

ஆசிரியரின் தேர்வுகள்...

அதிகம் வாசிக்கப்பட்டவை