தேசிய இளையோர் கைப்பந்து: தமிழக அணிகள் போராடி தோல்வி


தேசிய இளையோர் கைப்பந்து: தமிழக அணிகள் போராடி தோல்வி
x
தினத்தந்தி 14 Jan 2020 11:32 PM GMT (Updated: 2020-01-15T05:02:51+05:30)

தேசிய இளையோர் கைப்பந்து போட்டியில், தமிழக அணிகள் போராடி தோல்வியடைந்தன.

கவுகாத்தி,

கவுகாத்தியில் நடந்து வரும் 3-வது தேசிய இளையோர் விளையாட்டின் கைப்பந்து போட்டியில் நேற்று நடந்த 21 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவின் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் தமிழக அணி, குஜராத்தை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தமிழக அணி 21-25, 25-19, 26-24, 27-29, 12-15 என்ற செட் கணக்கில் போராடி குஜராத்திடம் தோல்வி கண்டது. இதே வயது பிரிவில் பெண்களுக்கான அரைஇறுதி ஆட்டத்தில் தமிழக அணி 25-23, 21-25, 18-25, 16-25 என்ற செட் கணக்கில் மேற்கு வங்காளத்திடம் வீழ்ந்தது. இன்று நடைபெறும் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டங்களில் தமிழக ஆண்கள் அணி, உத்தரபிரதேசத்தையும், தமிழக பெண்கள் அணி, அரியானாவையும் எதிர்கொள்கிறது.

Next Story