பிற விளையாட்டு

தேசிய கல்லூரி தடகளம்: எம்.ஓ.பி.வைஷ்ணவா அணி ‘சாம்பியன்’ + "||" + National College Athletics: MOP Vaishnava Team Champion

தேசிய கல்லூரி தடகளம்: எம்.ஓ.பி.வைஷ்ணவா அணி ‘சாம்பியன்’

தேசிய கல்லூரி தடகளம்: எம்.ஓ.பி.வைஷ்ணவா அணி ‘சாம்பியன்’
தேசிய கல்லூரி தடகள போட்டியில், எம்.ஓ.பி.வைஷ்ணவா அணி ‘சாம்பியன்’ பட்டம் வென்றது.
சென்னை,

ரிலையன்ஸ் பவுண்டேசன் சார்பில் கல்லூரிகளுக்கு இடையிலான தேசிய தடகள போட்டி மும்பையில் நடந்தது. இதில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி வீராங்கனைகள் தீபிகா (உயரம் தாண்டுதல்), நந்தினி (100 மீட்டர் தடை ஓட்டம்), ஷெரின் ஆண்ட்ரியா (நீளம் தாண்டுதல்), இளவரசி (800, 1,500 மீட்டர் ஓட்டம்), மீனாட்சி (குண்டு எறிதல்), ரோஷிணி (100 மீட்டர் ஓட்டம்), ஐஸ்வர்யா (டிரிபிள்ஜம்ப்) ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். 100 மீட்டர் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் எம்.ஓ.பி.வைஷ்ணவா அணி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. இந்த போட்டியில் மொத்தம் 10 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலப்பதக்கம் வென்ற எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி அணி பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.