பள்ளி மாணவிகளுக்கான தடகளம்: உயரம் தாண்டுதலில் சென்னை வீராங்கனை முதலிடம்


பள்ளி மாணவிகளுக்கான தடகளம்: உயரம் தாண்டுதலில் சென்னை வீராங்கனை முதலிடம்
x
தினத்தந்தி 20 Jan 2020 11:23 PM GMT (Updated: 20 Jan 2020 11:23 PM GMT)

பள்ளி மாணவிகளுக்கான தடகள போட்டியில், உயரம் தாண்டுதலில் சென்னை வீராங்கனை முதலிடம் பிடித்தார்.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஓ.பி.வைஷ்ணவா மகளிர் கல்லூரி சார்பில் பள்ளி மாணவிகளுக்கான 2-வது மாநில தடகள போட்டி நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. சீனியர் (9 மற்றும் 10-ம் வகுப்பு), சூப்பர் சீனியர் (பிளஸ் 1, பிளஸ் 2) ஆகிய பிரிவுகளில் நடைபெறும் இந்த போட்டியில் முதல் நாளில் நடந்த சீனியர் பிரிவு உயரம் தாண்டுதலில் மான்போர்ட் அகாடமி பள்ளி (சென்னை) வீராங்கனை வாலென்சியா டோனி (1.45 மீட்டர்) முதலிடம் பிடித்தார். இதே பிரிவில் நடந்த குண்டு எறிதலில் காயத்ரியும் (ஸ்ரீ வி.டி.எஸ். ஜெயின் பள்ளி), 3 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் அபிராமியும் (ஸ்ரீ வி.டி.எஸ். ஜெயின் பள்ளி) முதலிடத்தை தனதாக்கினார்கள். சூப்பர் சீனியர் பிரிவில் உயரம் தாண்டுதலில் பிருந்தாவும் (செல்வம் பள்ளி, நாமக்கல்), குண்டு எறிதலில் மோனிகா ஸ்ரீயும் (லேடி சிவசாமி பள்ளி, சென்னை), 3 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் ரம்யாவும் (ஸ்ரீ வி.டி.எஸ். ஜெயின் பள்ளி) முதலிடத்தை சொந்தமாக்கினார்கள். இந்த போட்டி இன்றுடன் நிறைவு பெறுகிறது.

Next Story