ஐ.எஸ்.எல். கால்பந்து: நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி. - ஒடிசா எப்.சி. அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து:  நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி. - ஒடிசா எப்.சி. அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 21 Jan 2020 11:56 PM GMT (Updated: 21 Jan 2020 11:58 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில், 64-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி. , ஒடிசா எப்.சி. அணியை எதிர்கொள்கிறது.


* ரஞ்சி கிரிக்கெட் தொடரில் மும்பையில் நடந்து வரும் (‘பி’ பிரிவு) உத்தரபிரதேசத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 353 ரன்கள் குவித்துள்ளது. சர்ப்ராஸ்கான் 132 ரன்கள் (160 பந்து, 14 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி களத்தில் உள்ளார். மும்பை அணி இன்னும் 272 ரன்கள் பின்தங்கி உள்ள நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டத்தில் தொடர்ந்து ஆடுகிறது.

* “ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிறகு எனது வாழ்க்கையே மாறி விட்டது. நிறைய வெற்றிகள் குவித்துள்ளேன். தோல்விகளையும் சந்தித்து இருக்கிறேன். ஒவ்வொரு கட்டமாக முன்னேற்றம் காணுகிறேன். இப்போது ஒவ்வொரு போட்டியிலும் நான் வெற்றி பெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இதை நான் நேர்மறையாக எடுத்துக் கொள்கிறேனே தவிர, கூடுதல் நெருக்கடியாக கருதவில்லை. எதிர்பார்ப்புகள் என்னை மேலும் கடினமாக உழைக்க வைக்கிறது’ என்று இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கூறியுள்ளார்.

* நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ராஸ் டெய்லர் நேற்று அளித்த பேட்டியில், ‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளிலும் முழுமையாக தோற்கடிக்கப்பட்டோம். ஆனால் இப்போது சொந்த மண்ணில் விளையாடப்போகிறோம். இந்தியா முற்றிலும் வித்தியாசமான அணி. உலகின் நம்பர் ஒன் அணியாக திகழ்கிறார்கள். ஆனால் உள்ளூர் சீதோஷ்ண நிலை எங்களுக்கு சாதகமாக இருக்கும்’ என்றார்.

* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் பெங்களூருவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 64-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி. அணி, ஒடிசா எப்.சி.யை சந்திக்கிறது.

* ஹராரேயில் நடந்து வரும் ஜிம்பாப்வேக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 3-வது நாள் முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 295 ரன்கள் எடுத்துள்ளது. குசல் மென்டிஸ் (80), மேத்யூஸ் (92 ரன், நாட்-அவுட்) அரைசதம் அடித்தனர்.


Next Story