பிற விளையாட்டு

சென்னை ஓபன் செஸ்: விசாக், விஷ்ணு முன்னிலை + "||" + Chennai Open Chess: Vizag, Vishnu Preface

சென்னை ஓபன் செஸ்: விசாக், விஷ்ணு முன்னிலை

சென்னை ஓபன் செஸ்: விசாக், விஷ்ணு முன்னிலை
சென்னை ஓபன் செஸ் போட்டியில், விசாக், விஷ்ணு ஆகியோர் முன்னிலை பெற்றுள்ளனர்.
சென்னை,

தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் டாக்டர் என்.மகாலிங்கம் கோப்பைக்கான 12-வது சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டி சோழிங்கநல்லூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்து வருகிறது. இதில் 6-வது சுற்றில் ரஷியாவின் யுடின் செர்ஜியுடன் தோல்வியை தழுவிய சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஹர்ஷவர்தன், நேற்று 7-வது சுற்றில் சிலி வீரர் வாஸ்குயிஸ் ஸ்கிரோடெர் ரோட்ரிகோவுடன் (சிலி) மோதினார். 39-வது காய் நகர்த்தலில் ஆட்டம் டிராவில் முடிந்தது. மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரரான சென்னையைச் சேர்ந்த விசாக், ரஷியாவின் யுடின் செர்ஜியுடன் டிரா கண்டார். இந்தியாவின் விஷ்ணு பிரசன்னா, சக நாட்டவர் குணாலை தோற்கடித்தார்.


இன்னும் 3 சுற்று ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில் விசாக், விஷ்ணு பிரசன்னா, ரஷியாவின் பொங்ராடோவ் பவெல், யுடின் செர்ஜி உள்பட 7 வீரர்கள் தலா 6 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறார்கள். இந்தியாவின் ஹர்ஷவர்தன், வெங்கடேஷ், கிரிநாத் உள்பட 13 பேர் தலா 5.5 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை ஓபன் செஸ்: ரஷிய வீரர் சாம்பியன்
சென்னை ஓபன் செஸ் தொடரில், ரஷிய வீரர் சாம்பியன் பட்டம் வென்றார்.
2. சென்னை ஓபன் செஸ்: 2 வீரர்கள் முன்னிலை
சென்னை ஓபன் செஸ் போட்டியில், 2 வீரர்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.