பிற விளையாட்டு

பல்கலைக்கழக பால் பேட்மிண்டன்: செயின்ட் ஜோசப்ஸ் அணி ‘சாம்பியன்’ + "||" + University Paul Badminton: St. Joseph's Team Champion

பல்கலைக்கழக பால் பேட்மிண்டன்: செயின்ட் ஜோசப்ஸ் அணி ‘சாம்பியன்’

பல்கலைக்கழக பால் பேட்மிண்டன்: செயின்ட் ஜோசப்ஸ் அணி ‘சாம்பியன்’
பல்கலைக்கழக பால் பேட்மிண்டன் போட்டியில், செயின்ட் ஜோசப்ஸ் அணி ‘சாம்பியன்’ பட்டம் வென்றது.
சென்னை,

அண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையிலான பால் பேட்மிண்டன் போட்டி திருச்சியில் உள்ள ஜெ.ஜெ.என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி அணி (சென்னை) 35-21, 35-22 என்ற நேர்செட்டில் வள்ளியம்மை என்ஜினீயரிங் கல்லூரி (சென்னை) அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முன்னதாக நடந்த கால்இறுதியில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியையும் (கன்னியாகுமரி), அரைஇறுதியில் வி.எஸ்.ஏ. கல்லூரியையும் (சேலம்) செயின்ட் ஜோசப்ஸ் அணி வென்று இருந்தது.