பிற விளையாட்டு

தாய்லாந்து பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா தோல்வி + "||" + Thailand Badminton: Saina lost in the first round

தாய்லாந்து பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா தோல்வி

தாய்லாந்து பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா தோல்வி
தாய்லாந்து பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் சாய்னா தோல்வியடைந்தார்.
பாங்காக்,

தாய்லாந்து மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், டென்மார்க் வீராங்கனை லின் ஹோஜ்மார்க்கை சந்தித்தார். 47 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சாய்னா 13-21, 21-17, 15-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார். 5-வது முறையாக லின் ஹோஜ்மார்க்குடன் மோதிய சாய்னா சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.


ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் 21-12, 14-21, 11-21 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் ஷிசர் ஹிரெனிடம் தோல்வி அடைந்தார். இதே போல் சமீர் வர்மா, பிரனாய் ஆகிய இந்தியர்களும் முதல் சுற்றுடன் நடையை கட்டினர். இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் நடால், ஹாலெப் வெற்றி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால், ஹாலெப் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர். முன்னாள் சாம்பியன் ஷரபோவா, தமிழக வீரர் குணேஸ்வரன் தங்களது ஆட்டங்களில் தோல்வி அடைந்து வெளியேறினர்.