ஒலிம்பிக் தகுதி சுற்று: இந்திய டேபிள் டென்னிஸ் அணிகளுக்கு ஏமாற்றம்


ஒலிம்பிக் தகுதி சுற்று: இந்திய டேபிள் டென்னிஸ் அணிகளுக்கு ஏமாற்றம்
x
தினத்தந்தி 24 Jan 2020 11:50 PM GMT (Updated: 24 Jan 2020 11:50 PM GMT)

ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியில், இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் ஏமாற்றம் அளித்தனர்.

கோன்டோமர்,

ஒலிம்பிக் போட்டிக்கான டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி சுற்று போட்டி போர்ச்சுகல் நாட்டில் உள்ள கோன்டோமர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் இந்திய அணி நேற்று கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் 1-3 என்ற கணக்கில் சுலோவேனியாவிடம் தோல்வி அடைந்தது. இரட்டையரில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், அதன் பிறகு சத்யன், சரத்கமல், ஹர்மீத் தேசாய் வரிசையாக ஒற்றையர் பிரிவில் ஏமாற்றம் அளித்தனர். பெண்கள் பிரிவின் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் ருமேனியாவிடம் போராடி தோற்றது. இவ்விரு ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்றிருந்தால் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றிருக்கும். தோல்வியின் மூலம் இந்திய டேபிள் டென்னிஸ் அணிகளின் ஒலிம்பிக் வாய்ப்பு குறைந்து போய் விட்டது.


Next Story