பிற விளையாட்டு

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணி 8வது வெற்றி + "||" + ISL Football: Goa Team 8th win

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணி 8வது வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணி 8வது வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் கேரளா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோவா அணி வெற்றிபெற்றது.

* தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் (2 ரன்) ஆட்டம் இழந்து வெளியேறிய போது, கேலரியில் இருந்த ரசிகர் அவரை நோக்கி திட்டினார். இதனால் ஆத்திரமடைந்த பென் ஸ்டோக்ஸ் அந்த ரசிகரை தாறுமாறாக வசைபாடியதுடன், மைதானத்தை விட்டு வெளியே வா பார்த்துக் கொள்ளலாம் என்று சாடினார். ரசிகருடன் அவர் செய்த வாக்குவாதம் வீடியோ கேமிராவிலும் பதிவானது. இதையடுத்து நடந்த சம்பவத்துக்கு பென் ஸ்டோக்ஸ் மன்னிப்பு கேட்டார். இது குறித்து விசாரணை நடத்திய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அவருக்கு போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதமும், ஒரு தகுதி இழப்பு புள்ளியும் விதித்து உத்தரவிட்டது.


* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கோவா நேரு ஸ்டேடியத்தில் நடந்த 67-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா அணி 3-2 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்சை வீழ்த்தியது. 14-வது ஆட்டத்தில் ஆடிய கோவா அணி 8 வெற்றி, 3 டிரா, 3 தோல்வி என்று 27 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். நாளை நடக்கும் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா- நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் மோதுகின்றன.

* ஒலிம்பிக் போட்டிக்கான டேபிள் டென்னிஸ் அணிகளுக்கான தகுதி சுற்று போர்ச்சுகலில் நடந்து வருகிறது. இதில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் ருமேனியாவிடம் தோற்ற இந்திய பெண்கள் அணி நேற்று நடந்த பிளே-ஆப் சுற்றிலும் 2-3 என்ற கணக்கில் பிரான்சிடம் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய பெண்கள் அணியின் ஒலிம்பிக் வாய்ப்பு பரிதாபமாக முடிவுக்கு வந்தது.

* நியூசிலாந்து மண்ணில் இந்திய ‘ஏ’ அணிக்காக விளையாடி வந்த வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது இடது கை மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி அரைஇறுதிக்கு தகுதி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டியை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து: அரைஇறுதிக்குள் நுழைவது யார்? சென்னை-மும்பை அணிகள் இன்று மோதல்
ஏற்கனவே கோவா, கொல்கத்தா, பெங்களூரு அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் எஞ்சி ஒரு இடத்துக்கு சென்னையின் எப்.சி., மும்பை சிட்டி அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பையை வீழ்த்தி கோவா அணி 11-வது வெற்றி
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியின் வெற்றிப்பயணம் தொடருமா? பெங்களூருவுடன் இன்று மோதல்
6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் 78-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி.யை சந்திக்கிறது.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணி 10-வது வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கோவா அணிதனது 10-வது வெற்றியை பதிவு செய்தது.