பிற விளையாட்டு

இந்திய கபடி அணி அனுமதி பெறாமல் பாகிஸ்தானுக்கு சென்றதால் சர்ச்சை + "||" + Controversy over Indian Kabaddi team's move to Pakistan without permission

இந்திய கபடி அணி அனுமதி பெறாமல் பாகிஸ்தானுக்கு சென்றதால் சர்ச்சை

இந்திய கபடி அணி அனுமதி பெறாமல் பாகிஸ்தானுக்கு சென்றதால் சர்ச்சை
இந்திய கபடி அணி அனுமதி பெறாமல் பாகிஸ்தானுக்கு சென்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
புதுடெல்லி, 

7-வது உலக கபடி சாம்பியன்ஷிப் போட்டி (சர்க்கிள் ஸ்டைல்) பாகிஸ்தானில் இன்று தொடங்குகிறது. பாகிஸ்தானில் முதல்முறையாக அரங்கேறும் இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய கபடி அணி வாகா எல்லை வழியாக லாகூருக்கு சென்றுள்ளது. இந்தியா சார்பில் வெளிநாட்டில் நடக்கும் எந்த ஒரு சர்வதேச போட்டிக்கும் செல்லும் போது மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டியது அவசியமாகும். அதுவும் பாகிஸ்தானுக்கு என்றால் கட்டாயம் ஒப்புதல் பெற வேண்டும். 

ஆனால் இந்த போட்டிக்கு இந்திய கபடி அணி எந்தவித அனுமதியும் பெறாமல் சென்றுள்ளதாக மத்திய விளையாட்டு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் சர்ச்சை வெடித்துள்ளது. இது குறித்து இந்திய அமெச்சூர் கபடி சம்மேளன நிர்வாகி எஸ்.பி.கார்க் கூறுகையில், ‘பாகிஸ்தானுக்கு கபடி அணி சென்றது குறித்து எங்களிடம் எந்த தகவலும் இல்லை. நாங்கள் எந்த கபடி அணிக்கும் அனுமதி கொடுக்கவில்லை. இது போன்ற நடவடிக்கைகளை நாங்கள் ஒரு போதும்ஆதரிக்க மாட்டோம். தவறு செய்தவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது’ என்றார்.

இந்திய வீரர்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததும் அவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு லாகூரில் உள்ள ஓட்டலில் தங்கவைக்கப்பட்டனர். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஈரான், கனடா உள்ளிட்ட அணிகளும் இந்த போட்டியில் பங்கேற்க இருப்பதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. "உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம்” ஏர் இந்தியாவுக்கு பாகிஸ்தான் பாராட்டு
கொரோனா வைரஸ் பரவியுள்ள இக்கட்டான சூழ்நிலையில் உங்கள் சேவை பெருமை அளிக்கிறது என ஏர் இந்தியாவுக்கு பாகிஸ்தான் பாராட்டு தெரிவித்துள்ளது.
2. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இம்ரான்கான் அரசு தோல்வி - பாகிஸ்தான் ஊடகங்கள்
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இம்ரான்கான் அரசு தோல்வி அடைந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் கூறி உள்ளன.
3. பாகிஸ்தானில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பு: தனிமைப்படுத்தும் வசதிகளில் அலட்சியம்
பாகிஸ்தானில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் பாகிஸ்தான் எல்லை தனிமைப்படுத்தும் வசதிகளில் அலட்சியம் காட்டுவது கவலை அளிக்கிறது.
4. தெற்கு ஆசியாவில் 487 பேர் கொரோனா வைரசால் பாதிப்பு
பாகிஸ்தானில் 247 பேர் உள்பட தெற்கு ஆசியாவில் 487 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
5. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு
முஸ்லீம்களை 1947-ல் பாகிஸ்தான் அனுப்பியிருக்க வேண்டும் என்று மத்திய மந்திரி கிரிராஜ்சிங் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.