பிற விளையாட்டு

‘பி’ டிவிசன் லீக் கைப்பந்து டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி ‘சாம்பியன்’ + "||" + Volleyball DG Vaishnava College Champion

‘பி’ டிவிசன் லீக் கைப்பந்து டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி ‘சாம்பியன்’

‘பி’ டிவிசன் லீக் கைப்பந்து டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி ‘சாம்பியன்’
சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் ‘பி’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது.
சென்னை,

நேற்று நடந்த இறுதிப்போட்டியில் டி.ஜி.வைஷ்ணவா-லயோலா கல்லூரி அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் டி.ஜி.வைஷ்ணவா அணி 20-25, 25-22, 25-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் எஸ்.டி.ஏ.டி. அணி 25-21, 25-16 என்ற நேர்செட்டில் அக்னி பிரண்ட்ஸ் அணியை வீழ்த்தியது.


பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு எஸ்.என்.ஜெ.குழும துணைத்தலைவர் எஸ்.என்.ஆனந்த் தலைமை தாங்கினார். வருமானவரி கூடுதல் கமிஷனர் பி.திவாகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார். தமிழ்நாடு கைப்பந்து சங்க செயல் துணைத்தலைவர் ஆர்.கே.துரைசிங், பொருளாளர் எம்.பி.செல்வகணேஷ், அசோசியேட் செயலாளர் மணி, சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன்துரை, செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன், பொருளாளர் பழனியப்பன், அசோசியேட் செயலாளர் ஸ்ரீகேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.