பெண்கள் கைப்பந்து: டாக்டர் சிவந்தி கிளப் அணி ‘சாம்பியன்’


பெண்கள் கைப்பந்து: டாக்டர் சிவந்தி கிளப் அணி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 18 Feb 2020 10:00 PM GMT (Updated: 18 Feb 2020 8:30 PM GMT)

சென்னை மாவட்ட பெண்கள் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது.

சென்னை,

நேற்று நடந்த இறுதிப்போட்டியில் டாக்டர் சிவந்தி கிளப்-விளையாட்டு விடுதி அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் டாக்டர் சிவந்தி கிளப் அணி 14-25, 18-25, 25-13, 25-19, 25-13 என்ற செட் கணக்கில் விளையாட்டு விடுதி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் எஸ்.டி.ஏ.டி. அணி 17-25, 25-19, 25-23, என்ற செட் கணக்கில் பிரசிடென்சி அகாடமி அணியை வீழ்த்தியது.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன் துரை தலைமை தாங்கினார். வருமானவரி துணை கமிஷனர் பி.சங்கர் பாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார். ரோமா குழும நிர்வாக இயக்குனர் ராஜன், சென்னை மாவட்ட கைப்பந்து சங்க நிர்வாகிகள் நரேந்திரகுமார் ஜெயின், உபைதுர் ரகுமான், பழனியப்பன், ஸ்ரீகேசவன், ஜெகதீசன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

Next Story