தேசிய பால்பேட்மிண்டன்: ரெயில்வே, கர்நாடகா அணிகள் ‘சாம்பியன்’


தேசிய பால்பேட்மிண்டன்: ரெயில்வே, கர்நாடகா அணிகள் ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 22 Feb 2020 11:20 PM GMT (Updated: 22 Feb 2020 11:20 PM GMT)

தேசிய பால்பேட்மிண்டன் போட்டியில், ரெயில்வே, கர்நாடகா அணிகள் ‘சாம்பியன்’ பட்டம் வென்றன.

சென்னை,

65-வது தேசிய சீனியர் பால்பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்தது. இதில் 67 அணிகளை சேர்ந்த 1,200 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதன் ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் (5 பேர்) இந்தியன் ரெயில்வே அணி 24-35, 35-28, 35-21 என்ற செட் கணக்கில் தமிழகத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் கர்நாடக அணி 35-31, 27-35, 35-24 என்ற செட் கணக்கில் தமிழகத்தை சாய்த்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு செயின்ட் ஜோசப்ஸ் கல்வி குழும தலைவர் பி.பாபு மனோகரன் தலைமை தாங்கினார். முன்னாள் சர்வதேச தடகள வீராங்கனை ஷைனி வில்சன், முன்னாள் சர்வதேச நீச்சல் வீரர் வில்சன் செரியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார்கள்.


Next Story