பிற விளையாட்டு

ஐ.எஸ்.எல். கால்பந்து: இறுதி ஆட்டம் கோவாவில் நடைபெற உள்ளது + "||" + ISL Football: The final match is to be held in Goa

ஐ.எஸ்.எல். கால்பந்து: இறுதி ஆட்டம் கோவாவில் நடைபெற உள்ளது

ஐ.எஸ்.எல். கால்பந்து: இறுதி ஆட்டம் கோவாவில் நடைபெற உள்ளது
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கோவாவில் (மார்ச்14-ந்தேதி) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


* ஜிம்பாப்வே- வங்காளதேசம் அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே தொடக்க நாளில் 6 விக்கெட்டுக்கு 228 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே 265 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை பிடித்த வங்காளதேச அணி ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 240 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் மொமினுல் ஹக் (79 ரன், நாட்-அவுட்), நஜ்முல் ஹூசைன் (71 ரன்) அரைசதம் அடித்தனர்.


* 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டித் தொடரில் நேற்றிரவு புவனேசுவரத்தில் அரங்கேறிய ஒடிசா எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஒரு கட்டத்தில் 2-4 என்ற கோல் கணக்கில் கேரளா அணி பின்தங்கி இருந்த நிலையில் கடைசி 8 நிமிடங்களில் கிடைத்த இரண்டு பெனால்டி வாய்ப்பையும் கோலாக்கியதால் தோல்வியில் இருந்து தப்பியது. நாளை நடக்கும் கடைசி லீக்கில் சென்னையின் எப்.சி.- நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன.

* ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கோவாவில் (மார்ச்14-ந்தேதி) நடைபெறும் என்று போட்டியின் ஒருங்கிணைப்பாளர் நிதா அம்பானி அறிவித்துள்ளார்.

* ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவில் இளம் வீரர்களின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடி கூறியுள்ளார். ஐ.பி.எல்.-ல் விளையாடும் இளம் வீரர்கள், வெளிநாட்டு வீரர்களுடன் பழகுவதன் மூலம் நெருக்கடியை சமாளிப்பது உள்ளிட்ட விஷயங்களை கற்றுக் கொள்ள முடிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: மும்பை அணி வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி வெற்றிபெற்றது.