பிற விளையாட்டு

ஆசிய ஸ்குவாஷ் போட்டி: இந்திய அணியில் தமிழக வீராங்கனை ஜோஸ்னாவுக்கு இடம் + "||" + Asian squash match: Josna's place in the Indian squad

ஆசிய ஸ்குவாஷ் போட்டி: இந்திய அணியில் தமிழக வீராங்கனை ஜோஸ்னாவுக்கு இடம்

ஆசிய ஸ்குவாஷ் போட்டி: இந்திய அணியில் தமிழக வீராங்கனை ஜோஸ்னாவுக்கு இடம்
ஆசிய ஸ்குவாஷ் போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீராங்கனை ஜோஸ்னா இடம் பிடித்துள்ளார்.
சென்னை, 

20-வது ஆசிய அணிகள் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியாவில் மார்ச் 25-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணிகளை இந்திய ஸ்குவாஷ் சம்மேளனம் நேற்று அறிவித்தது. 13 முறை தேசிய சாம்பியனும், உலக தரவரிசையில் 13-வது இடத்தில் இருப்பவருமான சவுரவ் கோஷல் தலைமையிலான இந்திய ஆண்கள் அணியில் அபிஷேக் பிரதான், ஹரிந்தர் பால் சந்து, அபய்சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

18 முறை தேசிய சாம்பியனும், உலக தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ளவருமான சென்னையைச் சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பா தலைமையிலான இந்திய பெண்கள் அணியில் தன்வி கண்ணா, சுனைனா குருவில்லா, சான்யா வாட்ஸ் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய அணியின் அதிகாரபூர்வ ஸ்பான்சராக ஐநாக்ஸ் லீசர் நிறுவனம் ஒப்பந்தம்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் அதிகாரபூர்வ ஸ்பான்சராக ஐநாக்ஸ் லீசர் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
2. 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாட தயார் - ஹர்பஜன்சிங் விருப்பம்
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாட தயார் என்று ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.