பிற விளையாட்டு

பல்கலைக்கழக பேட்மிண்டன்: எஸ்.ஆர்.எம். அணிக்கு வெள்ளிப்பதக்கம் + "||" + University Badminton: Silver medal for the SRM team

பல்கலைக்கழக பேட்மிண்டன்: எஸ்.ஆர்.எம். அணிக்கு வெள்ளிப்பதக்கம்

பல்கலைக்கழக பேட்மிண்டன்: எஸ்.ஆர்.எம். அணிக்கு வெள்ளிப்பதக்கம்
பல்கலைக்கழக பேட்மிண்டன் போட்டியில், எஸ்.ஆர்.எம். அணிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
சென்னை,

முதலாவது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள் ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேசுவரம் மற்றும் கட்டாக்கில் நடந்து வருகிறது. இதில் பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். (சென்னை)-ஜெயின் பல்கலைக்கழக (பெங்களூரு) அணிகள் மோதின. இதில் எஸ்.ஆர்.எம். அணி 0-2 என்ற கணக்கில் ஜெயின் பல்கலைக்கழக அணியிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றது. பெண்களுக்கான கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் அண்ணாமலை பல்கலைக்கழக அணி (சிதம்பரம்) 8-0 என்ற கோல் கணக்கில் கோழிக்கோடு பல்கலைக்கழக (கேரளா) அணியை தோற்கடித்தது.