பிற விளையாட்டு

சர்வதேச ஜூனியர் பேட்மிண்டன்: முதல் சுற்று ஆட்டத்தில் தமிழக வீரர் ரித்விக் வெற்றி + "||" + International Junior Badminton: Ridwick wins first round match

சர்வதேச ஜூனியர் பேட்மிண்டன்: முதல் சுற்று ஆட்டத்தில் தமிழக வீரர் ரித்விக் வெற்றி

சர்வதேச ஜூனியர் பேட்மிண்டன்: முதல் சுற்று ஆட்டத்தில் தமிழக வீரர் ரித்விக் வெற்றி
சர்வதேச ஜூனியர் பேட்மிண்டன் போட்டியில், முதல் சுற்று ஆட்டத்தில் தமிழக வீரர் ரித்விக் வெற்றிபெற்றார்.
சென்னை,

சர்வதேச ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) பேட்மிண்டன் போட்டி நெதர்லாந்தில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ரித்விக், சிங்கப்பூர் வீரர் ஹியுன் லீயை சந்தித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த ரித்விக் 21-12, 21-11 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் ரவி 21-11, 21-8 என்ற நேர்செட்டில் இந்தோனேஷியாவின் டெகோ செட்யா அத்மஜாவை வீழ்த்தினார்.