மாநில கைப்பந்து: சென்னை, திருவாரூர் உள்பட 4 அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்கு தகுதி


மாநில கைப்பந்து: சென்னை, திருவாரூர் உள்பட 4 அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்கு தகுதி
x
தினத்தந்தி 28 Feb 2020 11:24 PM GMT (Updated: 28 Feb 2020 11:24 PM GMT)

மாநில கைப்பந்து போட்டியில் சென்னை, திருவாரூர் உள்பட 4 அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்கு தகுதிபெற்றன.

சென்னை,

முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில கைப்பந்து போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று காலை நடந்த ‘நாக்-அவுட்’ சுற்று கடைசி ஆட்டங்களில் திருவாரூர் அணி 25-18, 25-14 என்ற நேர்செட்டில் மதுரையையும், சென்னை அணி 25-21, 2-21 என்ற நேர்செட்டில் நாமக்கல்லையும், செங்கல்பட்டு அணி 25-17, 25-18 என்ற நேர்செட்டில் திருச்சியையும், திருவள்ளூர் அணி 25-19, 25-27, 25-19 என்ற செட் கணக்கில் நெல்லையையும் வீழ்த்தி தொடர்ச்சியாக 4-வது வெற்றியை ருசித்தன. இதன் மூலம் திருவாரூர், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்கு முன்னேறின. சூப்பர் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் அதிக வெற்றிகளை பெறும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும்.

நேற்று மாலை நடந்த சூப்பர் லீக் சுற்று ஆட்டம் ஒன்றில் சென்னை அணி 25-13, 25-17, 25-13 என்ற நேர்செட்டில் திருவள்ளூர் அணியை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் திருவாரூர் அணி 29-27, 17-25, 25-20, 25-22 என்ற செட் கணக்கில் செங்கல்பட்டு அணியை சாய்த்தது.


Next Story