மாநில கைப்பந்து: சென்னை அணி ‘சாம்பியன்’


மாநில கைப்பந்து: சென்னை அணி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 29 Feb 2020 11:26 PM GMT (Updated: 29 Feb 2020 11:26 PM GMT)

மாநில கைப்பந்து போட்டியில், சென்னை அணி ‘சாம்பியன்’ பட்டம் வென்றது.

சென்னை,

முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில கைப்பந்து போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் 3-வது நாளான நேற்று நடந்த சூப்பர் லீக் சுற்று ஆட்டம் ஒன்றில் சென்னை அணி 25-22, 21-25, 25-23, 25-18 என்ற செட் கணக்கில் செங்கல்பட்டு அணியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் திருவாரூர் அணி 25-22, 27-25, 25-16 என்ற நேர்செட்டில் திருவள்ளூரை சாய்த்தது. இன்னொரு ஆட்டத்தில் செங்கல்பட்டு அணி 25-20, 25-16, 26-24 என்ற நேர்செட்டில் திருவள்ளூரை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் சென்னை அணி 25-17, 25-23, 25-23 என்ற நேர்செட்டில் திருவாரூரை வீழ்த்தியது. 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற சென்னை அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 2 வெற்றி, ஒரு தோல்வி கண்ட திருவாரூர் அணி 2-வது இடத்தையும், ஒரு வெற்றி, 2 தோல்வி அடைந்த செங்கல்பட்டு அணி 3-வது இடத்தையும் பிடித்தன. 3 ஆட்டங்களிலும் தோல்வி கண்ட திருவள்ளூர் அணி 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.


Next Story