பிற விளையாட்டு

தேசிய சீனியர் கபடி: தமிழக அணியின் வெற்றி தொடருகிறது + "||" + National Senior Kabaddi: The success of the Tamil Nadu team continues

தேசிய சீனியர் கபடி: தமிழக அணியின் வெற்றி தொடருகிறது

தேசிய சீனியர் கபடி: தமிழக அணியின் வெற்றி தொடருகிறது
தேசிய சீனியர் கபடி போட்டியில் தமிழக அணியின் வெற்றி தொடர்ந்து வருகிறது.
சென்னை,

67-வது தேசிய சீனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான போட்டியில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழக அணி நேற்று நடந்த தனது 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் கோவாவை சந்தித்தது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தமிழக அணி 53-24 என்ற புள்ளி கணக்கில் கோவாவை சாய்த்து தொடர்ச்சியாக 3-வது வெற்றியை ருசித்தது. முந்தைய ஆட்டங்களில் அரியானா மற்றும் டெல்லி அணிகளை வீழ்த்தி இருந்த தமிழக அணி தனது பிரிவில் முதலிடத்தை பிடித்து கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. பெண்கள் பிரிவில் இன்று நடைபெறும் கால்இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் தமிழக அணி, பஞ்சாப்பை எதிர்கொள்கிறது.தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவின் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி
வானில் எதிரியின் இலக்கை அழிக்கும் இந்தியாவின் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றிபெற்றது.
2. இந்தியாவின் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி
இந்தியாவின் அதிநவீன பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்து உள்ளது.
3. பீகார் மாநில முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் இன்று பதவி ஏற்பு தொடர்ந்து 4-வது முறையாக ஆட்சி அமைக்கிறார்
பீகாரில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில், 243 இடங்களைக்கொண்ட சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது.
4. ஆர்.ஆர்.நகர், சிரா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பா.ஜனதா அபார வெற்றி
கர்நாடக சட்டசபையில் காலியாக இருந்த ஆர்.ஆர்.நகர், சிரா ஆகிய 2 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜனதா அபார வெற்றி பெற்றது. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) ஆகிய கட்சிகள் வசம் இருந்த இந்த இரண்டு தொகுதிகளையும் பா.ஜனதா கைப்பற்றியது.
5. அமெரிக்க தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் இழுபறி மாகாணங்கள்
அமெரிக்க தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் இழுபறி மாகாணங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.