பிற விளையாட்டு

ஒலிம்பிக் தகுதி சுற்று குத்துச்சண்டை: இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் அபாரம் + "||" + Olympic Qualifying Round Boxing Indian player Vikas Krishnan Abharam

ஒலிம்பிக் தகுதி சுற்று குத்துச்சண்டை: இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் அபாரம்

ஒலிம்பிக் தகுதி சுற்று குத்துச்சண்டை: இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் அபாரம்
ஒலிம்பிக் தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
அம்மான், 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடந்து வருகிறது. இதில் நேற்று 69 கிலோ எடைப்பிரிவில் களம் கண்ட காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன் 5-0 என்ற கணக்கில் நுர்சுல்தான் மமாட்டாலியை (கிர்கிஸ்தான்) வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார். விகாஷ் அடுத்து ஜப்பான் வீரர் செவோன்ரெட்ஸ் ஒகாஜாவாவை எதிர்கொள்கிறார். இந்திய நட்சத்திரங்கள் மேரிகோம், அமித் பன்ஹால் உள்ளிட்டோர் தங்களது சவாலை இன்று தொடங்குகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. ஒலிம்பிக் தகுதி சுற்று குத்துச்சண்டை: இந்திய வீரர்கள் கவுரவ் சோலங்கி, ஆஷிஷ் குமார் வெற்றி
ஒலிம்பிக் தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீரர்கள் கவுரவ் சோலங்கி, ஆஷிஷ் குமார் ஆகியோர் வெற்றிபெற்றனர்.